தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, […]

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அமைந்துள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாகமலைக் குன்று செழிப்பான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை எனச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது. நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 118 வகையான பறவைகள், […]

விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கரும்புத் தோட்டத்தில் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அம்பிகா என்ற பெண்ணுடன் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சங்கர் வேலையை முடித்ததும் தன் வீட்டிற்கு செல்லாமல், பெரும்பாலும் அம்பிகாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்த சூழலில், இருவேல் […]

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி இன்று சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.. அப்போது “ காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் […]