மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் […]

சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் பலர், வாகனங்களுக்காகத் தங்கள் வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கத் தவறுவதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே புதிதாக வீடு கட்டுவோருக்கு வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) கட்டாயமாக்கியிருந்தாலும், தனி வீடுகளுக்கான விதிமுறைகளில் நிலவிய […]

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் யாமினி பிரியா (20). பெங்களூரு, ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வந்த யாமினி, பனசங்கரியில் உள்ள கல்லூரியில் பி.ஃபார்ம் படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று (அக்டோபர் 16) காலை கல்லூரிக்குச் சென்ற அவர், தேர்வை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் மந்திரி வணிக வளாகத்தின் […]

நெல்லை மாவட்டம் பேட்டை குளம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகர் ராஜ் (வயது 45), தூத்துக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ‘கிராக்கி’, ‘விதி எண்-3’, ‘உயிர் மூச்சு’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் துணை வேடங்களில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் ராஜ், மாசானம் என்பவரின் மகன் ஆவார். இவரது மனைவி சாய்ஸ். ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மௌனம் காத்து வந்தார். இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், சென்னை உயர் […]