In Chennai today, both gold and silver have seen a sharp increase in price.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார். கடந்த 2025-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பான வழக்கிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் […]
விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’வில் அண்மையில் ஒளிபரப்பான ஜல்லிக்கட்டு குறித்த விவாதம், சின்னத்திரை ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பகிர்ந்துகொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களில், ‘பன்னிக்குண்டு காளை’ பற்றிய வரலாறு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜல்லிக்கட்டு களத்தில் ‘எமனின் தூதுவன்’ என்று வர்ணிக்கப்படும் அளவுக்குப் பன்னிக்குண்டு காளை அதீத ஆக்ரோஷத்தைக் காட்டியுள்ளதாக நிகழ்ச்சியில் […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளன. குறிப்பாக, அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தற்போது ஒரு இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு 2 நாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் […]
தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற பாமக அவசர செயற்குழு கூட்டம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், அன்புமணி ராமதாஸ் இனி பாமக-வின் தலைவராக நீடிக்க தகுதியில்லை என்றும், கட்சியின் பெயர், கொடி மற்றும் […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளான இன்று ஆன்லைன் வாயிலாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் வியூகங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. இம்முறை வெறும் கள எதார்த்தங்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து இபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணங்கள், வேட்பாளர் தேர்வுகள் மற்றும் பிரசாரப் பயணங்களின் தொடக்கம் […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]
நாமக்கல் மண்டலத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் முட்டை உற்பத்தி துறையில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த விலையேற்றம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த மாதத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சமாக 6 ரூபாய் 40 காசுகள் வரை சென்றது. ஆனால், கடந்த 15 நாட்களில் இந்த விலை படிப்படியாக சரிந்து 5 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், தற்போது […]
ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் மருச்சுக்கட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பிடிக்கத் தொடங்கியது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை கிளம்புவதை ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனடியாக […]

