சென்னை புரசைவாக்கத்தில், ஒரு குடும்பமே கூட்டு சேர்ந்து அரங்கேற்றிய ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) பாணி மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்கார குடும்பத்துப் பெண்களை குறிவைத்து, பாசம் மற்றும் காதல் வலையில் வீழ்த்தி, நகைகளைப் பறித்ததோடு ஆபாசப் படங்களை எடுத்து மிரட்டிய தாய் மற்றும் அவரது இரு மகன்களின் கொடூர முகம் தற்போது அம்பலமாகியுள்ளது. வேப்பேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாடகைக்கு குடியேறிய சங்கீதா (54) மற்றும் அவரது […]

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இனி பாடல்கள் மற்றும் ரேடியோ சத்தங்கள் ஒலிக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிடுவதால், பயணிகளுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்படுவதாக எழுந்து வந்த புகார்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்களின் போது பேருந்துகளில் அதிரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது பயணிகளின் […]

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]

தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம், தற்போது ஒரு புதிய கட்சியின் உதயம் என்ற நிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் நிலவிய அதிகாரப் போட்டிகள், சசிகலாவின் சிறைவாசம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் என பல்வேறு சோதனைகளை கடந்த சசிகலா, தற்போது தனது சொந்த அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், […]

பாட்டாளி மக்கள் கட்சியில், தற்போது ஏற்பட்டுள்ள தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான அதிகார போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் பாரம்பரியமான ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே நிலவும் மோதல், இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. கட்சியின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அன்புமணி ராமதாஸ் அந்தப் பொறுப்பில் நீடிப்பதாகக் கூறி டாக்டர் ராமதாஸ் தரப்பு […]

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவடைந்துள்ளதை சாதகமாக்கி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் உற்பத்தி தட்டுப்பாட்டினால் ஆவின் நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ பாலிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருவதுடன், அந்த சுமையை நுகர்வோர் தலையில் சுமத்தியுள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா, பால் […]

மத்திய – மாநில அரசுகள் இணைந்து பொது விநியோக திட்டத்தில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளை தடுத்து, தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன. புதிய விதிகளின்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் நர்மதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நர்மதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது தோழி வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர், மர்மமான முறையில் மாயமானார். இந்நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி ரங்கம்பாளையம் புறவழிச்சாலையில் தலையில் கல்லைப் போட்டு […]

2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் விடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. எரிவாயு சிலிண்டர் விலை முதல் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் முறை வரை, இந்த மார்ச் மாதம் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் : வழக்கம் போல மாதத்தின் முதல் […]

இஸ்லாமிய நாட்காட்டியின் புனித மாதமான ரமலான், வெறும் பசியையும் தாகத்தையும் தாங்குவது மட்டுமல்ல; அது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு மாபெரும் பயிற்சிப் பாசறை. மனித குலத்தின் வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், நோன்பின் முழுமையான பலனைப் பெற உணவைத் தவிர்ப்பதுடன், நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளிலும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தடையல்ல, அது நாவிற்கும் பொருந்தும். பிறரைப் பற்றிப் புறம் பேசுவது, […]