கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள நல்லட்டிபாளையம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் […]

தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க முதன்மை பண்டிகைகளில் ஒன்றான ‘ஆடிப்பெருக்கு’ திருநாள் இன்று மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இயற்கையின் கொடையையும், ஜீவநதிகளையும் போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு, பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் நிறைந்து வழிவதை கொண்டாடும் ஒரு முதன்மையான நன்னாளாகும். வரலாற்று ரீதியாக புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கமாக விளங்கும் இந்நாளில், நல்ல மழைப்பொழிவு, வளமான நிலம் மற்றும் நல்விளைச்சலுக்காக விவசாயிகள் காவிரித் தாய்க்கும் நீர் தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகளை […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் […]

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு கட்டமாக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் களமிறங்கிய அமைச்சர் […]

பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை குறுபம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (45), அவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமன் (35) ஆகியோர் காரில் […]

ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான வாராந்திர விடுமுறைகள் மற்றும் மாநில அளவிலான பண்டிகை நாட்களைச் சேர்த்து அதிகபட்சமாக 14 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வழக்கமாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடனும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுடனும் சேர்த்து மாதம் 6 […]

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க பாஜக மேற்கொள்ளும் சதித் திட்டம் என்றும், அதனை ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பின்னர், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை […]

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாயமான 15 வயது சிறுமியை மீட்ட காவல்துறையினர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரை கைது செய்தனர். பெற்றோரை இழந்த நிலையில் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்த சிறுமி, கடந்த ஜூலை 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடையூர் காவல் […]

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,675 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக […]

காவிரி விவகாரத்தில் திமுக கபட நாடகமாடுவதாகவும், ஆட்சியை இழந்த விரக்தியில் மு.க.ஸ்டாலின் வன்மத்தைப் பொழிந்து வருவதாகவும் தவெக கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”விவசாயிகள் மற்றும் கர்நாடக வாழ் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சுயநல நோக்கத்துடன் செயல்படும் திமுகவைப் போல் அல்லாமல், மக்கள் நலனை முதன்மையாக கொண்டே தமிழக அரசு […]