சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை […]

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம். உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் […]

இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா–மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் […]

1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயின்று வரும் நபர்கள் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் […]

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் […]

ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், […]

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.. இது வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும். குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி […]

தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமாரிப்புத்துறை தெரிவித்துள்ளது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராக வருவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுவது போல, தினசரி அடிப்படையில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்யவும் […]