ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை தள்ளிவிட்ட நபர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் அருகே, ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை பாலியல் தொல்லை செய்து, அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்துடன், காலும் உடைந்தது.. இந்த கொடூர செயலிலில் ஈடுபட்ட ஹேமராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.. இந்த நிலையில் […]

சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை […]

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,295 பணியிடங்களுக்கு விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் நாளை தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினாலும் குரூப் 4 தேர்வுக்கு வேறு […]

பெண் வழக்கறிஞரின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை 48 மணி நேரத்திற்குள் இணையத்திலிருந்து நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டக் கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் மாணவி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் அந்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வைரலானது. இந்த வீடியோக்களை முடக்கி, இணையதளத்தில் […]

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான், அவரது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கமுதி அருகே மேலராம நதி கிராமத்தை சேர்ந்த சிலர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் உ.முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டித்தேவருக்கு இந்திராணி, நாகம்மாள்என இரு மனைவிகள் இருந்தனர். இந்திராணியின் மகன் முத்துராமலிங்க தேவர் திருமணம் […]

அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே.. ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் […]