வீடு, மனைகளை விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் ரியல் எஸ்டேட் அனைத்தும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதை காட்சிபடுத்தும் வகையில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களின் வாங்குபவர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையைக் […]

2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]

தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான […]

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) அன்று சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]

தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் மாநகராட்சியைப் பொறுத்தவரை 677, நகராட்சியில் 455 என மொத்தம் 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அப்பெயரை நீக்கி, பூக்கள், மரங்கள், இயற்கை, […]

தாம்பரத்தில் உள்ள நன்மங்கலம் ஏரி பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது என்பதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி, ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மனுவை, அப்பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில், நீர் நிலத்தில் […]

பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]

திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழந்தார். திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது ஜீப் டயர் வெடித்ததால், வாகனம் நிலைகுலைந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். அரசு பணிக்காக ஜீப்பில் சென்ற போது கோட்டாட்சியர் விபத்தில் சிக்கிய […]

ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் அருகே நடந்த காதல் தகறாறு விவகாரத்தில்  17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை கைது செய்து […]