கடலூர் மாவட்டம் பாசாரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆவேசமாக உரையாற்றினார். 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் தேமுதிகவின் பலம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தனது பேச்சின் மூலம் அவர் கோடிட்டுக் காட்டினார். “எந்தக் கூட்டணிக்கு தேமுதிக செல்கிறதோ, அதுவே உண்மையான மெகா கூட்டணி; நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளே உங்களை […]

சென்னையில் தொழிலதிபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி காசோலைகளை வழங்கி 70 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த புகாரில், பிரபல நபர் ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த்குமார், தனது பேருந்து போக்குவரத்து நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக பெரிய அளவிலான கடன் தேவையில் இருந்தபோது, தென்காசியைச் சேர்ந்த […]

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனை பேணுவதிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை வேரறுப்பதிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, தற்போது மற்றுமொரு புரட்சிகரமான திட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இப்போது ‘மாலை நேரச் சிற்றுண்டி’ (Evening Snacks) வழங்கும் புதிய பரிந்துரையை அரசு பரிசீலித்து வருகிறது. மாணவர்களின் ஆரோக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் […]

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய மும்முனைப் போட்டியாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டைகளை தகர்க்கும் நோக்கில் மிகத் துல்லியமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் உச்சகட்டமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி அல்லது திமுகவின் செல்வாக்கு மிகுந்த நட்சத்திரத் தொகுதிகளில் விஜய்யின் நேரடிப் […]

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அருகேயுள்ள இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாரதி மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும், நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாப்பாத்தி காடு பகுதி அருகே வந்தபோது, […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கூட்டணி கணக்குகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த தனது பார்வையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, “அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் […]

தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக அமையும் போகி திருநாளை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் கொண்டாட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற நச்சுப் பொருட்களை எரிப்பதை தவிர்த்து, இயற்கையோடு இணைந்த ஒரு மாற்றத்தை படைக்க அரசு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னோர்கள் காலத்தில் […]

தமிழ்நாட்டின் ஆன்மீக பொக்கிஷங்களில் ஒன்றான கொங்கு மண்டலம், பல அறியப்படாத வரலாற்று ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள சிங்காநல்லூர் எனும் சிறிய கிராமத்தில், பாலாற்றங்கரையில் எழிலுடன் வீற்றிருக்கிறார் அருள்மிகு சித்தாண்டீஸ்வரர். இக்கோவில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, சுமார் 800 ஆண்டுகால சோழர் காலத்து வரலாற்று சான்றுகளை தாங்கி நிற்கும் ஒரு கலை கூடமாகும். இரவு […]

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் ஒன்றாத் திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனை உருவெடுத்துள்ளது. தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வந்த, நீண்டகால இந்து மதப் பழக்கமாக இருந்த ஒன்று, இப்போது சட்டப் போராட்டங்கள், நிர்வாக முடிவுகள் மற்றும் அரசியல் மோதல்களில் சிக்கியுள்ளது. இந்து முன்னணி உட்பட பல இந்து அமைப்புகளும், அரசியல் விமர்சகர்களும், திமுக அரசு வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை உருவாக்கி, பழமையான இந்து மரபுகளைப் […]

உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் தனது ஆட்சியில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.. அப்போது “ உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உங்கள் கனவை நிறைவேற்றப் போகிறது.. உங்க கனவை சொல்லுங்க.. அதை நிறைவேற்றி தருகிறோம்.. சொன்னால் சொன்னதை செய்பவம் இந்த ஸ்டாலின்.. மக்களாகிய நீங்கள் என்னுடன் இருப்பதால் கடந்த 2021 சட்டமன்ற […]