தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் கடந்த மாதம் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட […]

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தலைமையிலான கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் ‘திஷா’ (Disha) என்ற இந்திய எல்என்ஜி (LNG) கப்பல், ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். 62,370 மெட்ரிக் டன் எல்என்ஜி சரக்கை ஏற்றிச் செல்லும் ‘திஷா’ கப்பல், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போர் மண்டலத்திலிருந்து வெளியேறும் இந்தியக் கொடியை ஏந்திய முதல் எல்என்ஜி கப்பலாகும். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள […]

கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. […]

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் […]

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் இணையப் போவதாக கூறுவது வெறும் யூகம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.. மக்கள் சொன்ன கருத்துகளை உள்வாங்கி இருக்கிறேன்.. தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ […]

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இங்கு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும் வடமாநில தம்பதியின் 3 வயது பெண், திடீரென காணாமல் போனது.. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை தேடிய நிலையில், குழந்தை ஒரு முட்புதரில் குழந்தை காயங்களுடன் கிடந்துள்ளது.. இதையடுத்து உடனடியாக […]

முதல்வர் விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் […]

பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. இன்று காலை 6 மணியளவில் பெரம்பலூரில் இருந்து அரியலூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அப்போது டி.களத்தூர் பிரிவு பாதை அருகே, எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.. இந்த விபத்தில் சிக்கி காரில் சென்ற சங்கர், […]