திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உள்ளே இருந்து சத்தமாகப் பேச்சுக்குரல்களும், கும்மாள சத்தமும் கேட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சுமார் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் […]

நாடாளுமன்ற அரசியலில் இருந்து மெல்ல மாநில அரசியலுக்கு தனது கவனத்தை திருப்பி வரும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என தென் மண்டலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தென் மண்டல திமுகவினர் கனிமொழியின் தலைமையின்கீழ் ஓரணியில் திரண்டு வருகின்றனர். இந்த சூழலில், முதல்வரின் மருமகன் சபரீசனின் என்ட்ரி கனிமொழிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கனிமொழி ஏற்கனவே கவனித்து வரும் அதே மாவட்டங்களில், சபரீசன் தனது குழுவினருடன் திடீர் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. இ இந்த நிலையில், தவெக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக […]

தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.. இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய முதல்வர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. அரசியலை தாண்டி ராகுல்காந்தி தனது சகோதரர் போன்றவர் என்று முதல்வர் தெரிவித்தார்.. மேலும் “ ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் நிலவும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஹாஃப்-பாயில்’ சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது முட்டையை குறிப்பிடுவதாகப் பரவலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பறவைகள் அல்லது […]

திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு […]

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM), இந்திய கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை வேரோடு ஒழிப்பதையும், சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் தனது முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி […]

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், 41 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காமல் கரூர் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “நிஜமான துணிச்சல் இருந்திருந்தால், அந்தத் துயரச் சம்பவத்தின்போது விஜய் கரூரை விட்டு ஓடியிருக்கக் கூடாது” என்று கூறிய அவர், […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பேயன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நந்தகுமார் (26) என்ற வாலிபர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூலித் தொழிலாளியான இவர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஜெயராமன் கொலை வழக்கில் நந்தகுமார் தொடர்புடையவர் என்பதாலும், அவர் சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் என்பதாலும், பழைய பகையால் […]