பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ள நிலையில், ஊழல் திமுக ஆட்சியை ஒழிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாக மோடி பதிவிட்டிருந்தார்.. இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியை தான் தரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக கொடுத்த […]

மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார்.. மேலும் “ தமிழகத்தின் மீது மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறது.. நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓர வஞ்சனை என்று தான் கேட்கிறோம்.. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி அதற்கு பதிலாக வளர்ச்சி அடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற விபி […]

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.. மேலும் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன் இணைந்த நிலையில் நேற்று […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின்’ (Sukanya Samriddhi Yojana) வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை வெளியிட்ட அரசு, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போதைய […]

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதார உதவியாக மாநில அரசு வழங்கி வரும் ‘வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை’ திட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் தற்போது மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளன. 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பயன்பெறக்கூடிய இத்திட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவுறுத்தல்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏற்கனவே 12 காலாண்டுகள் (3 ஆண்டுகள்) உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு இனி மீண்டும் நிதி உதவி […]

தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாநில அரசு சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ‘தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், தங்களின் 60 வயது நிறைவுக்குப் பிறகு மாதம் 1,200 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முதுமைக் […]

சொந்த நிலமோ அல்லது வீடோ வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. ஆனால், கிரயப் பத்திரம் முடிந்து கைக்கு வந்துவிட்டாலே அந்தச் சொத்து முழுமையாக நமதாகிவிட்டது என்று கருதுவது மிகப்பெரிய தவறாகும். பத்திரப் பதிவு என்பது ஒரு பரிமாற்றம் மட்டுமே. அந்தச் சொத்தின் மீது அரசு அங்கீகரிக்கும் உண்மையான உரிமையைப் பெற பட்டா மாறுதல் (Patta Transfer) செய்வது மிக அவசியமான இறுதி கட்டமாகும். வருவாய்த் துறை ஆவணங்களில் உங்கள் […]

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் என்பவர், திருப்பூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தனது குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகள் சிம்யாவிற்கும், சக தொழிலாளி பிரேம்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சிம்யாவிற்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தந்தை ஆறுமுகத்திற்குத் தெரியவரவே, அவர் தனது […]