பெண்களை அதிக அளவுக்கு தாக்கும் புற்றுநோய் வகைகளில் ஒன்று தான் மார்பகப் புற்றுநோய். எனவே இதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதுமே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற முனைப்புடன் பலரும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்பக புற்றுநோய் பற்றி பல விதமான தவறான கருத்துக்களும் நிலவி வருகின்றன. உதாரணமாக கருப்பு நிற பிரா அணிந்தால் மார்பக புற்றுநோய் வரும் என்பது பரவலாகக் கூறப்படும் ஒரு […]

செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும். அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண்/ தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், […]

‘விளக்குக்கு எண்ணெய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உடலுக்கு ஆரோக்கியம்’ என்று ரவீந்திர நாத் தாகூரின் பிரபலமான ஒரு வரி உண்டு. அதாவது, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஒருவர் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். ஒருவர் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அவ்வப்போது அவருக்கு எல்லா வகையான நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன, இதன் காரணமாக அவரால் தனது வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. ஒரு நபர் நல்ல வாழ்க்கையை விரும்பினால், அவர் உணவில் சிறப்பு […]

சமையலறையின் ஒருங்கிணைந்த பகுதியாக பூண்டு உள்ளது, ஆனால் அதன் பங்கு சுவையை அதிகரிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், பூண்டின் நன்மைகள் மிகவும் ஆழமானவை, அது ஒரு மருத்துவ அதிசயமாக மாறியுள்ளது. குறிப்பாக நெய் அல்லது எண்ணெயில் வறுத்து உட்கொள்ளும்போது, அது வெறும் 24 மணி நேரத்திற்குள் உடலில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்குகிறது. வறுத்த பூண்டின் நன்மைகள் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? வறுத்த பூண்டில் […]

எல்லோரும் தங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் வயது அதிகரிப்பு, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மாசுபாடு காரணமாக, சருமம் காலத்திற்கு முன்பே வயதானதாகத் தோன்றத் தொடங்குகிறது. ஆனால், கொரியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டுப் பெண்கள் தங்கள் அழகைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்துவார்கள். இதற்காக அவர்கள் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு பாரம்பரிய அழகு இரகசியம் […]

வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் […]

பெருவாரியானப் பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக அளவில் சரும பராமரிப்பு வேலைகள் செய்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். முகத்தை விட அதிகமாய் கழுத்தில் தான் நிறைய வியர்வை தங்குகிறது, மற்றும் நகை, அணிகலன் அணியும் போது நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு […]

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு, ஏற்கனவே விடுபட்ட பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இம்முறை கட்டாயம் ரூ.1000 கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இருப்பின் உடனடியாக […]

கர்ப்ப காலத்தில் சிக்கன் சாப்பிட பலர் பயப்படுகிறார்கள். சிக்கன் சாப்பிட்டால் சூடு பிடிக்கும்.. அல்லது வேறு ஏதாவது நடக்கும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் உள்ளது. ஆனால் நிபுணர்கள் சிக்கன் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். அதை எப்படி சாப்பிடுவது நல்லது என்பதை இங்கே பார்ப்போம். கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், பலர் கர்ப்ப காலத்தில் சிக்கன் […]