நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : New India Assurance Company (NIACL) வகை : மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 500 பணியின் பெயர் : Apprentice பணியிடம் : இந்தியா முழுவதும் கல்வித் தகுதி : ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் […]

கர்நாடக மாநிலம் பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில் சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் குடும்பத்தினரை, மொத்தமாக தீர்த்துக் கட்ட அவர்களுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சைத்ரா – கஜேந்திராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் […]

கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு […]

கேரளாவில் ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போது அங்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கேரளா இப்போது மற்றொரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.. அம்மாநிலத்தில் தற்போது ஹெபடைடிஸ் தொற்று வேகமாக பரவுகிறது.. திருச்சூர் மாவட்டம் இந்த தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. கோவிட் மற்றும் ஹெபடைடிஸின் இரட்டைச் சுமை […]

துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பான DIGIPIN ஐ அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீட்டு முகவரி உங்கள் ஸ்மார்ட்போனைப் போலவே ஸ்மார்டாக இருக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தியாவின் பழமையான அஞ்சல் முறையை நவீனமயமாக்கும் ஒரு முயற்சியாக, அரசாங்கம் DIGIPIN ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய PIN குறியீடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய டிஜிட்டல் முகவரி […]

மும்பை அருகே புறநகர் ரயிலில் இருந்து பயணிகள் விழுந்து 1 பேர் பலி, 9 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் திங்கள்கிழமை மும்ப்ரா-சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) விரைவு புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் 1 பயணி உயிரிழந்தார். என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று தானே நகராட்சி ஆணையர் தெரிவித்தார். முதற்கட்ட தகவலின்படி, மும்ப்ரா ரயில் நிலையத்தில் ஓடும் […]

23 வயது இளம்பெண்ணை பல மாதங்களாக அடைத்து வைத்து தாயும், மகனும் சித்ரவதை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்ரகனாஸ் மாவட்டம் சோதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு டோம்ஜூர் பகுதியைச் சேர்ந்த நபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நபருடன் இளம்பெண் பேசி வந்துள்ளார். அப்போது, தனக்கு வேலை எதாவது கிடைக்குமா..? என இளம்பெண் கேட்டுள்ளார். […]

Ration Card Update : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையின் e-KYC செயல்முறையை ஜூன் 30, 2025 க்குள் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் விநியோக முறையை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்ற மத்திய அரசு […]

ஒரு நபர் ஆன்லைன் மூலம் “வாவ் மோமோ” உணவகத்தில் இருந்து வெஜ் டார்ஜிலிங் மோமோ காம்போ (Veg Darjeeling Momo Combo) என்ற உணவு ஆர்டர் செய்தார். அவர் ஒரு சைவ உணவு பழக்கம் பின்பற்றும் நபர். தான் ஆர்டர் செய்த சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் மோமோ (Chicken Momo) வழங்கப்பட்டதால் அவரது மத உணர்வுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். உணவகத்தின் அலட்சியம் காரணமாக, […]

கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]