செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் பிறந்துள்ளது. சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை, குடும்ப பட்ஜெட் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மானியம், வங்கிகளில் நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள், பிறப்பு – இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள், என்.ஆர்.ஐ சொத்து வாங்குவதற்கான வரி விதிகள் மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களின் விலை […]

திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில், ஆன்மிகப் பெருமை மட்டுமின்றி நாள்தோறும் நிகழும் திவ்ய அலங்காரங்களுக்கும் உலகப் புகழ்பெற்றது. அலங்காரப் பிரியரான வேங்கடேசப் பெருமாளுக்கு தினசரி 65 முதல் 70 கிலோ வரையிலான தங்க, வைர ஆபரணங்கள் சாற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், ஸ்பெயினின் குங்குமப்பூ, சீனத்து வாசனை திரவியமான புனுகு, நேபாள கஸ்தூரி, மைசூர் சந்தனம் மற்றும் தமிழகத்தின் பச்சை கற்பூரம் உள்ளிட்ட உலகெங்கிலுமிருந்து கொண்டுவரப்படும் நறுமணப் பொருட்களால் ஸ்ரீனிவாசன் ஆராதிக்கப்படுகிறார். […]

தலைநகர் டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் (NCR) நிலவும் அபாயகரமான காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் மத உணர்வுகள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு சமநிலையான ஒரு நடைமுறையை கண்டறிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், “பட்டாசுகளுக்கு முழுமையான தடை […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவது மற்றும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க ‘இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டணியின் இரண்டாவது முக்கிய ஆலோசனை கூட்டமான இதில், திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் […]

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் தங்க நகை வாங்குவதற்காக, தங்களுக்குப் பிறந்த ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.1.2 லட்சத்திற்கு பெற்றோர் விற்ற கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரிடம் கைமாறிய அந்த குழந்தை ஹைதராபாத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெற்றோர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள முகுந்த்வாடி பகுதியில் வசித்து வந்த தம்பதி, […]

பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பெற்றோர்களால் அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதன்மையானது ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ (SSY). தமிழகத்தில் இத்திட்டம் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ என்ற பெயரில் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு 8.2 சதவீத கூட்டு வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கான புதிய வட்டி விகிதங்களை மத்திய அரசு […]

சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6.25 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 10.6 சதவீதம் அதிகரித்து சுமார் 6.91 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வுக்கு பங்களாதேஷ் நாட்டின் சுற்றுலாப் பயணிகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 74,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். […]

இன்று திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தை மிக கடுமையான விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தது. சந்தை தொடங்கிய ஒரே மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது; நிஃப்டி 50 23,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. வர்த்தக தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.4,82,16,004 கோடியாக இருந்தது. ஆனால், காலை 10:15 மணியளவில் அது ரூ.4,77,19,611 கோடியாக சரிந்து, முதலீட்டாளர்களுக்குச் சுமார் […]

ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வர்த்தக தள்ளுபடி விகிதக் கட்டணம் (MDR) விதிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், இது தொடர்பாக விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15-ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக ரீதியிலான […]

ராஞ்சியில் உள்ள மதுக்கடைக்குள் திடீரென புகுந்த குரங்கு ஒன்று, மதுபாட்டிலை எடுத்து குடித்துவிட்டு அங்கே இருந்த மது பெட்டிகள் மீது மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஒர்மாஞ்சி சவுக் பகுதியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு குரங்கு மதுக்கடைக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் முதலில் கடைக்குள் வந்த குரங்கை வெளியேற்ற முயன்றனர். அதனை […]