ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு நிதிச் சிக்கலின்றி நல்ல எதிர்காலத்தை அமைக்கவே கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க மத்திய அரசு வழங்கியுள்ள ஒரு அற்புதமான திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு ஒரு நிம்மதியான […]

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லே அவுட் பகுதியில், மனைவிக்கு வேலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கணவர் அவரை கொலை செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் (29) என்பவரும், அவரது மனைவி மஞ்சு (28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் […]

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட இந்திய படைப்பாக வெளியாகி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. முதல் பாகமான ‘காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பும், அதில் இருந்த தெய்வீகத் தன்மையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. கதைக்களம் […]

தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கும் டிம்பிள் ஹயாத்தி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஹைதராபாத் ஷேக்ஹேபேட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் டேவிட் ஆகியோர், 22 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதுடன், அவரது மொபைல் போனையும் சேதப்படுத்தியதாக ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த அந்த வீட்டுப் பணிப்பெண், […]

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை வளர்ந்து வரும் மனநலப் பிரச்சினைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. […]

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 […]