அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிறபகல் புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து சரியாக 1.38 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. […]

265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]

அகமதாபாத் ஏர் இந்திய விமானம் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறி கிடப்பதால், அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருப்பதாக உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் கூறுவது காண்போரை கண்கலங்க வைக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI171), நேற்று (ஜூன் 12) புறப்பட்ட சில விநாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது. விமானம் வானில் […]

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு […]

வெளிநாட்டு நாணய வைப்புகளில் பணத்தை வைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி (RBI) தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Liberalised Remittance Scheme (LRS) என்ற திட்டத்தின் கீழ் ஆண்டின் முடிவில் ஏற்படும் அதிகளவான வெளிநாட்டு நாணய அனுப்புதல்களை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு நாணயத்தில் லாக்-இன் காலத்துடன் கூடிய […]

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள காத்திருக்கின்றன. ஏற்கனவே, இதற்கான ஆன்சர் கீ ஏற்கனவே வெளியான நிலையில், முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் நீட் தேர்வு முடிவுகள் 2025 வெளியிடும் […]

இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 11A என்ற சீட்டில் இருந்த விஸ்வாஸ் என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். […]

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டபோது நேரில் பார்த்த அப்பகுதி இளைஞர் ஒருவர் அதிர்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். இன்று 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். […]