தமிழ்நாட்டில் புதிதாக 4 அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2025 […]

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]

நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது, இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறையாகும். பொருளாதார நெருக்கடி, மருத்துவ தேவை, விவசாய தேவை, சுபகாரியங்கள் என அவரவர் தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்கிறார்கள். இந்நிலையில் தான், […]

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.  ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]

பாமகவில் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு இன்று மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை […]

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ல் தனது அரசியல் கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டி மாநாடு, சென்னையில் பொதுக்குழு, கோவையில் பூத் மாநாடு என தொடர்ச்சியான செயல்பாடுகளால் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற விஜய், தற்போது மாவட்ட மட்ட கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி வருகிறார். எனினும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், முழு நேர அரசியலில் முழுமையாக இறங்காமல் […]

தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், ” ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது ”உயிரே உறவே தமிழே” என தொடங்கினேன். தமிழில் […]

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு […]