ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது? அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? என விமர்சித்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். […]

ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என மனசாட்சியின்றி பச்சை பொய்யை மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். […]

மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் திமுகவை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, மதிமுகவை சேர்ந்த வைகோ, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து 6 புதிய […]

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்சன் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் மாநிலங்களவைக்கு செல்கின்றனர். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் […]

ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப்பெற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது எனவும், அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் அரசாங்கம் சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு; உலகில் […]