தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது […]

நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]