தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, […]

திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் […]

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது என்றும், அப்பணிகளுக்கு தமிழ் மொழித் தகுதி கட்டாயம் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 1,797 பேருந்து நடத்துனர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான பணி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ‘எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.61.56 […]

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்மண்டல கவுன்சிலின் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் குழுத் துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக […]

தமிழ்நாட்டில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் […]

சமூக வலைதளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக் கூட காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் மக்களின் மாற்றுக்கருத்துகளையும் நியாயமான விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தியதே கடந்த காலங்களில் திமுக வீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக […]

தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையின் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ், அரசு ஊழியர்கள், போட்டித் தேர்வர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் அறிவித்தார். ➣ அரசுப் பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது குழந்தைப் பேறுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தி வழங்கப்படும். ➣ டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), ரயில்வே […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், கேரள முதல்வர் சதீசன், […]

பாமகவை சாதி கட்சியாக முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பாமக இதுவரை 6 இடஒதுக்கீடுகளை போராடிப் பெற்றுத் தந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றம் […]

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் நாளிதழ் செய்தியாளர்களை தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோளிங்கரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ கபிலிடம், யூடியூபர் சிவா என்பவர் படம் குறித்த விமர்சனத்தை கேட்க […]