நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார் என எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. மதுரையில் […]

திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். மதுரை உத்தங்குடியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் முக்கிய பொதுக்குழு என்பதால், மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து அணி நிர்வாகிகளும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் […]

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியது தேமுதிக கூட்டணியில் இருந்து மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என […]

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த வகையில், திமுக சார்பில் மாநிலங்களவை […]

திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணியை பலப்படுத்த பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாமக கூட்டணி பேச்சு வார்த்தையில் இடியை இறக்குவது போல தந்தை […]

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தவுடன், முதல் ஐந்து நாட்களுக்கு பாடப் புத்தகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுவதை மனதார வரவேற்கிறேன். சீருடை, புத்தகப்பை, லஞ்ச் பாக்ஸ் உணவு, வீட்டுப்பாடம், […]

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் […]

என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும். […]

அண்ணாமலையாவது பரவாயில்ல.. எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் […]

ராமதாஸ் – அன்புமணி மோதலால் மன உளைச்சலில் இருப்பதாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ள நிலையில், இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமே அவர் தான் என பாமக பொருளாளர் திலகபாமா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]