”பாமகவின் பொருளாளராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என திலகபாமா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்மையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். மேலும், செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் […]

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழலில், அண்மையில் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், செயல் தலைவராக அன்புமணி […]

திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சற்றுமுன் ராமதாஸ் அறிவித்த நிலையில், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி அறிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார. இதனால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாவட்ட […]

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. ராமதாஸுக்கு ஆதரவாக ஒருதரப்பும் அன்புமணிக்கு ஆதரவாக மறுதரப்பும் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் மேலும் வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே […]

தந்தை ராமதாஸின் உயிருக்கு மகன் அன்புமணியால் ஆபத்து இருப்பதாக மறைந்த காடுவெட்டி குருவின் உறவினரான வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான மணிகண்டன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காடுவெட்டி குருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அவர் ராமதாஸிடம் சென்றார். அப்போது, தனக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், வெளிநாட்டு […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தாண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. மாமலப்புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த விழா நடைபெறுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மல் பரிசாகவும், மாணவருக்கு வைர மோதிரமும் தவெக தலைவர் விஜய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, 2, 3ஆம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு […]

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]

தமிழ்நாட்டில் புதிதாக 4 அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2025 […]

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]

நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது, இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறையாகும். பொருளாதார நெருக்கடி, மருத்துவ தேவை, விவசாய தேவை, சுபகாரியங்கள் என அவரவர் தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்கிறார்கள். இந்நிலையில் தான், […]