திமுக மூத்த நிர்வாகியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேருவின் துறை தொடர்பான ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில் தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, அமைச்சரின் துறையில் நடந்த பணியிட நியமனங்களில் ரூ.888 கோடி வரையிலும், டெண்டர் விவகாரங்களில் ரூ.1,020 கோடி வரையிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சரின் […]

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை வீட்டுக் […]

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புதிய வியூகங்களுடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.கவும், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. […]

தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற சகாப்தமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் […]

உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் […]

தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும்–கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்தகல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்த […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]

ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், […]