சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசினார்.. அப்போது 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை,  மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.. இப்போது நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அந்த துறை அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் […]

சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.. அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.. நாட்டு மக்களை தான் ஜெயலலிதா தனது வாரிசாக பார்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் […]

தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது.. தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதில் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4,500 பேர் […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் […]

அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலகர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன்பின்னர் வழக்கை பட்டியலிட வேண்டும்.. என்று தமிழக அரசு வாதிட்டது.. அதன்படி, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன், வரும் 17-ம் தேதி, தலைமை செயலாளர், மதுரை மாநகர […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு […]