கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த விபத்தில், பயங்கர சத்தத்துடன் நச்சுப் புகை வெளியேறி அருகில் இருந்த குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 90 பேர் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம் […]

தைரியம் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. […]

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, கடந்த 9-ம் தேதி, திமுக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் […]

ஆம்புலன்ஸில் இபிஎஸ் செல்வார் என பேசவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.. 3 மாதங்களாக அவர் பஸ்ஸில் தான் சுற்றி வருகிறார்.. 15 நாட்களுக்கு முன்பு அவர் ரோட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, […]