நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் […]

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2,500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் வழங்கியிருக்கிறார்.உண்மையில் 2021-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் […]

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு.‌ கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுகுணா உயிரிழப்பு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் […]

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் […]

கரூர் சம்பவம் திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது என கூறி, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் […]