தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்.. குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் […]

தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. […]

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரையில் நடந்த 2-வது மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மக்களை சந்திக்க தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கும் விஜய், இதற்கான அனுமதியை பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திருச்சிக்கு வந்தார். அப்போது, அவரை வரவேற்க ஏராளமான […]

விருத்தாசலத்தில் சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் பாமக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர், விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி சலீம் (28) ரூ.10 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் […]

முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி. மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். முதலீடுகளின் அளவு மிகக் குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக […]

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி வாயிலாக விருப்பம் உள்ளவர்களை […]

கருணாநிதியை விட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த விசிக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ‘ஏர்போர்ட்’ […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மெகா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, ஜான் பாண்டியன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், திண்டுக்கல்லில் நடந்த பரப்புரையின்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் […]