அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை, ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது. பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். […]

பாமக தலைவர்கள் இருவர் நெஞ்சுவாலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் இன்று காலம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து பாமக கௌரவ தலைவர் தலைவர் ஜி.கே மணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம், தருமபுரியில் நடைபெறும் பாமக பொதுக்குழு […]

தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி, பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள். முதலில் […]

தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு […]

ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்ததால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி […]

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்பிற்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்கள் சமூக நிலை குறித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை ஆகும். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, […]

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதிக்கப்படாத விதத்தில் சொத்துக்கள் குவித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு எதிராக CBI வழக்குப்பதிவு செய்தது.. 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, […]