பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் (தேசிய / மாநில / பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத) பதிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின், (சின்னம், வரி விலக்கு) உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் […]

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழுவில் ஓய்வூதியம் குறித்த கருத்துகளை வழங்குவதற்கு வரும் 18.8.2025 முதல் சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஆசிரியர், அரசு அலுவலர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. . இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் […]

அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் முடித்துக் கொண்டு தற்பொழுது மூன்றாவது கட்ட […]

கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் […]

ராகுல்காந்தி கைதை கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், விஜய்யை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி […]

2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]