fbpx

பெங்களூரு, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற இருப்பதால் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் பெங்களூரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பெங்களூர் மாநகராட்சிக்கு …

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுகுழுவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது எனவும், ஜூன் 25ஆம் …

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெயலலிதா அவர்கள்‌ 22.09.2016 அன்று மருத்துவமனையில்‌அணுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள்‌ குறித்தும்‌, அதைத்‌ தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம்‌ வரையிலும்‌ அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்‌ …

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்.5ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை …

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இந்தியா வெற்றி அடைந்ததும் …

”கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு சென்று மாணவர்களை சந்திக்க வேண்டும்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “முதலமைச்சர் உயர்கல்வித்துறையை பொற்காலமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ளார். அவ்வாறு நிச்சயமாக மாறும் என்பதற்கு உதாரணம்தான் நான் முதல்வன் திட்டம். கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும். …

பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”ஓபிஎஸ் தன்னை பழைய பாசத்துடன் அண்ணன் என்று அழைத்துள்ளார் என்றும் பழைய பகை கசப்பு உணர்வுகளை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடலாம் என்றும் …

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17, அன்று நடைபெறும் என செய்தி வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 …

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள முதன்மை கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று தமிழில் வழிபாடு செய்ய வைக்க வேண்டும் என சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை …

அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது …