நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. மறுபுறம், அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. ஆனால் விசிக, கம்யூனிஸ்ட், நாதக, தவெக என அனைத்து கட்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.. ஆனால் எந்த கட்சியும் அவரின் அழைப்பை ஏற்கவில்லை.. தவெக தலைமையில் தான் கூட்டணி என்று விஜய் அறிவித்துவிட்டார்.. தனித்தே […]

கமல்ஹாசன், வில்சன் உள்ளிட்ட 6 தமிழக எம்.பிகள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக இருந்தனர். இவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் தேதியுடன் முடிவடைந்தது.. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழக எம்.பிக்கள் தங்களின் இறுதி உரையை ஆற்றினர்.. இதனிடையே இந்த […]

செஞ்சியில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளரை கண்டித்து கட்சி நிர்வாகிகள் திடீரென விஜய் படத்தை தூக்கி எறிந்து காலால் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை […]

முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு. […]

பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.. பாமகவில் தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது.. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.. மேலும் “ என் பெயரை போடக்கூடாது […]