fbpx

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்” என அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் …

தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழா முடிந்ததும் …

சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, …

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுச் சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு …

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், கடந்த 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை …

மக்களவையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் …

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கூவலப்புரம், காவட்டுநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுபற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது டி.கல்லுப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தில் உள்ள வெங்கடாசலபதி மகன் பாலாஜி (25) என்பது தெரிந்தது. இது குறித்து பேரையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

உதயநிதி என்னிடம் வந்து காதலை சொன்னவுடன் அரசியல் பின்னனியுள்ளவர் என்பதால் பிற்காலத்தில் இவரும் அரசியல்வாதியாக மாற வாய்ப்பிருப்பதாக கூறி அவரது காதலை நிராகரித்துவிட்டேன்.

சென்னை சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் தமிழ் திரையுலகில், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலினுடைய மனைவி, கிருத்திகா. அரசியல் குடும்பத்தின் மருமகள், உதயநிதி  ஸ்டாலினின் மனைவி என்பதைத் …

தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையைப் போல, கேரளாவில் அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி, செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை என தெரிவித்தார். இந்த சேவையை அரசு …

கோவையில் காப்பகம் என்ற பெயரில் மோசடி வேலைகளை செய்து வரும் கும்பலுக்கும், திமுகவினருக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அடுத்த அட்டுக்கல் கிராமத்தில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஒரு …