fbpx

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாக சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், பாஜக தலைமையை பொறுத்த வரை அதிமுகவில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை. அனைத்து அணிகளையும் இணைத்து வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. பாஜகவின் …

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய அவர், “நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். குடியரசுத் தலைவராக பதவி ஏற்றது பெருமை அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றது …

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ராயப்பேட்டை போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றபோது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தில் …

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுங்கள்’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ”அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும். எல்லாம் தானாக …

இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை …

டெல்லியில் பிரதமர் மோடி நடத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கான பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 நாள் பயணமாக கடந்த 22-ந் தேதி டெல்லி சென்றார்.. டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜனாதிபதி பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். …

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமூக சேவை ,கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன எம்.பி.க்களாக மாநிலங்களவைக்கு ஜனாதிபதி நியமிக்கலாம். அதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜேந்திர பிரசாத், …

தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைபொருள் கலாசராத்திற்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தவிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. …

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லி மாநிலங்களில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் இறங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் …

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம் என்ற ஜார்கண்ட் மாநிலத்தின் திட்டத்தை தமிழகமும் பின்பற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஜார்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். …