fbpx

பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதை, ஓசி பயணம் என்று கூறியது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் …

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கான தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக …

சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் சீமான் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலமும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாம் …

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து, மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக்க திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி …

மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக அரசு அமைந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது …

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக …

பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:- திமுக அமைச்சர் துரைமுருகன் நேற்று ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னதை சீக்கிரம் நிறைவேற்றி விடுவோம். “சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்” அம்மாவுக்கு ஆயிரம், பெண்ணுக்கும் ஆயிரம் என 2000 ரூபாய் கொடுக்கும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி …

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை யாராலும் தடுக்க முடியாது என்று  பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு  காவல்துறை அனுமதியளிக்கவில்லை . இதற்கு கண்டனம் தெரிவித்து  கோவை தெற்கு பா.ஜக. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையும், காங்கிரஸின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தமிழக முதலமைச்சர்  வழங்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் …

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வாழை விவசாயிகளுக்கு கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக …