2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தார். இரண்டு ஆண்டு […]

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் […]

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது. 5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாதலுக்கு அவரது மகனும் சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மற்றும் […]

தமிழ்நாட்டில் இணையதள ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் ஆகவே அது முறைப்படி சட்டமாக்கப்பட்டது. தற்போது இணையதள விளையாட்டு ஆணையம் மற்றும் இணையதள விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்ற புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டனர் இந்த புதிய விதிமுறைகள் […]

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ் அணி சார்பாக நடத்தப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர். இதில் பேசிய ஓபிஎஸ் தொண்டர்களை ஒன்றிணைக்கும் தர்மயுத்தம் நடந்து வருகிறது இன்று முதல் நம்முடைய தர்மயுத்தம் ஆரம்பமாகிறது. அதிமுகவை அழிப்பதற்கு திட்டமிடும் […]

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழா மாநாடு நடந்தது. ஓபிஎஸ் அணியின் சார்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில் 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர். அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த மாநாட்டில் அதிமுக கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தனர். மாநாட்டில் […]

கடந்த 14ஆம் தேதி திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுகவினரை சார்ந்தது தான் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் சரியாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக புகார் இருந்ததை தொடர்ந்து, நேற்று திடீரென்று அந்த நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை […]

ஒரு முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகவே நான் அனைத்து திட்டங்களையும் வகுக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதாவது மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரையின் 100வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இளைஞர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அண்ணாவின் பேச்சு மாலை நேரத்து கல்லூரி போல என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலும் […]

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் மீது அவரது வாகனத்தை மோதி, காலில் காயம் ஏற்படுத்தியதாகவும், போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கைது […]

அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசிதழில் வெளியிடப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு […]