திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை […]

சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை […]

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அந்த கடித்தத்தில் “ என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் […]

வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார் என மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர். இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா […]

காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கான உரங்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜெ.பி பிரகாஷ் நட்டா கூறியதாவது ; காரீப் பருவத்தில் உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் யூரியா தடையின்றி விநியோகிப்பதற்கு வகை செய்ய வேண்டும். இதனையடுத்து தெலங்கானா மாநில விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் […]

பொதுமக்கள் வழங்கும் மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறைவாரியாக தமிழ்நாடு துணை […]

கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு கடுமையாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருக்கோவில்கள் சார்பில் தற்போது 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மட்டும் 22,455 மாணவர்கள் பயின்று வருகின்றனர். […]

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ‘சஹ்கார் சம்வாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது வாழ்க்கையிலிருந்து விலகியவுடன், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்து நூல்களைப் படிக்க அதிக நேரம் செலவிடவும் விரும்புவதாகக் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு […]