பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், நேற்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி […]

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]

அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே இச்சம்பவம் குறித்து […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து நான்கு மணி நேரம் தொடர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் […]

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவையாவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைக்கு ஏற்ப கூடுதலாக மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த […]

கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் நாளை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருப்புவனத்தில் போராட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம்.. அனுமதி கொடுத்துவிட்டனர்.. நாளை ஆர்ப்பாட்டம் என்று உறுதி செய்த பின்னர், நள்ளிரவில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதுவரை நடந்த எல்லா போராட்டத்திற்கும் நாங்கள் அனுமதி […]

சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், […]