திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த […]

ஆந்திராவில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேரணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் ஒருவர் வாகனம் மோதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சத்தேனப்பள்ளி அருகே, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாகன ஊர்வலம் சென்றார். அவரை வரவேற்க சீலி சிங்கையா என்ற 54 வயது நபர், கம்பியைத் தாண்டி வாகனத்துக்கு அருகில் சென்றதாகக் […]

மதுரையில் இன்று முருகன் மாநாடு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து கந்தசஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்று எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முருகன் மாநாடு இன்று மதுரையில் நடக்கிறது. இந்த மாநாட்டில், பல லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த நேரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி […]

2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யாருக்கு வாய்ப்புள்ளது? என்பதைப் பற்றி லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக […]

ஆங்கிலம் குறித்து அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார் . ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஆங்கிலம் மொழி இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான […]

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் […]

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விரைவில் வெளியேறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா […]

தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்எஸ்ஐ பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வது, […]

பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் […]