விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதை விட பிரம்மாண்டம்.. விருதுநகரில் […]

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வேலை தீவிரம் காட்டி வருகிறது.. அதன்படி திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு என தொடர்ச்சியாக பல மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்கிறது.. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை […]

தமிழக அரசியல் களத்தின் மூத்த தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தூண்களில் ஒருவருமான கே.லிங்கமுத்து (75), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.6) காலமானார். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், குடியாத்தம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் கே. லிங்கமுத்து. தனது பதவிக்காலத்தில் அந்தத் தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கம் கேட்க தொடங்கியுள்ள நிலையில், முன்னணி செய்தி நிறுவனமான நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் பலப்பரீட்சை நிலவி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலின் பாரம்பரியமான இருமுனைப் போட்டியைச் சிதைத்து, ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, முதலமைச்சர் […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளை கொண்டுள்ள அமைப்புகள் அதிமுக பக்கம் சாய்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தெம்பை அளித்துள்ளது. மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ திரு மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா […]

மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை […]