1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் […]

1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]

ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ளது. அதன் பரம எதிரிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து அதைத் தாக்கி வருகின்றன, மேலும் முழு மத்திய கிழக்கு நாடுகளும் இந்தத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளன. இந்தப் போர் உலகிற்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் ஈரானின் வரலாறு போர்களால் நிறைந்துள்ளது. அது தனது இருப்பைப் பாதுகாக்க பல போர்களை நடத்தியது, சில சமயங்களில் படையெடுப்பாளர்களுடனும், சில சமயங்களில் தனது சொந்த மக்களுடனும். ரத்தத்தால் கறைப்பட்ட ஈரானின் […]

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று. ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது? ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த […]

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் கட்டியெழுப்பியவர் தளபதி விஜய். ரசிகர்களின் ஆதரவை மிகுந்த அளவில் பெற்றிருக்கும் இவர் நடித்த திரைப்படங்கள் வெளியாவும் நேரங்களில் ரசிகர்கள் கொண்டாடும் பண்டிகை போல் அமைகின்றது. ஆனால், இதன் மறுபுறமாக அவரது படங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைகள் இல்லாமல் வெளிவந்ததாக சொல்ல முடியாது. படப்பிடிப்பில் தொடங்கி, விளம்பர நிகழ்வுகள், அரசியல் கருத்துகள், வரிப்பணங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் என ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சர்ச்சை இருந்தே தீரும். […]

இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை கவலைக்கு மருந்தாகவும், பொழுதுபோக்கும் அம்சமாகவும் திகழ்கிறது. வரும் தலைமுறையினருக்கு இசை ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் […]

யோகாவின் முக்கியத்துவம், நன்மைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடாப்பட்டு வருகிறது. இந்தியாவில் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கினறனர். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பல்வேறு வகையில் உதவும் என்று சொல்லப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மனநிலை ஆரோக்கியம் உடல்நலனைப் பேண உடற்பயிற்சி மிகவும் அவசியமானதாக ஆகிவிட்டது. பணி சுமை, மனசோர்வு உள்ளிட்டவற்றை நிர்வகிக்க […]

உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர். அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம். 2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி […]

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான். ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார். இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் […]