இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது […]

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நகைச்சுவையில், அண்மையில் வெளியான ‘லவ் டுடே’, ‘வாரிசு’ ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் ‘ஜெயிலர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், “வலைப் பயிற்சியின்போது தோனி பயன்படுத்திய பேட் இது, நேரடியாக அவரது கைகளிலிருந்து வந்துள்ளது. பேட்டினை […]

சென்னையில் நடைபெற்ற இந்தியா – நேபால் மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி சமனில் முடிந்தது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்தியா – நேபால் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி செயல்பட்டார். போட்டி தொடங்கிய துவக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், முதல் பாதியில் இரண்டு அணிகளுமே எந்த […]

2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் […]

உடற்தகுதியை நிரூபிப்பதற்காக வீரர்கள் ஊசிகளை செலுத்திக் கொள்வார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய ஆபரேஷனில் ரகசியமாக எடுக்கப்பட்ட பேட்டியில் சேத்தன் சர்மா கூறியதாவது, “வீரர்கள் சிலர் 85% உடற்தகுதியுடன்தான் இருப்பார்கள். மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும் கூட, தாங்கள் விளையாட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒழுங்காக குனியக் கூட தெரியாது. […]

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான இயான் மோர்கன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் இயான் மோர்கன். அயர்லாந்து நாட்டில் பிறந்த இவர் 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். 2009 – 2022 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும், […]

மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் தொடக்க பேட்டர்களான முனிபா அலியும் ஜவேரியா கானும் விரைவிலேயே பெவிலியன் திரும்பியபோதும் கேப்டன் மரூப் மட்டும் […]

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பிரபல நடிகரின் மகன் 5 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், மகாராஷ்டிர அணி சார்பில் பங்கேற்றார். அதில் 100 மீ, 200 மீ மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 400 மற்றும் 800 மீட்டர் பிரிவில் வேதாந்திற்கு வெள்ளிப் பதக்கம் […]

கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலக அளவில் அபாயகரமான அணியாக ஒரு காலத்தில் அறியப்பட்டது தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ஆனால் அந்த அணி தற்போதும் அதே நிலையில் இல்லை என்பதே உண்மை. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் மோதுகின்ற நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்து வரும் […]

கிளப் போட்டிகளில் மொத்தமாக 500 கோல்களுக்கு மேல் அடித்து ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ 4 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 21-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் […]