இந்தியா-இலங்கைக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
கிரிக்கெட் உலகமே தல தோனியின் ரசிகர்களாக இருக்கும் நிலையில், அவரோ வாகனங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டவராக இருக்கின்றார். எம்எஸ் தோனிக்கு பைக்குகள் மற்றும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதற்கு அவரிடத்தில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையே சான்றாகும். எக்கசக்கமான வாகனங்கள் அவரிடத்தில் உள்ளன. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு தனி அறையே வைத்துள்ளாராம். உதாரணமாக நிஸான் ஜுங்கா போன்ற அரிய வகை கார்கள் அவரிடத்தில் […]
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜெயதேவ் உனத்கட் பெற்றுள்ளார். ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் டெல்லி-சௌராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை விழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் சௌராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட். 3-வது பந்தில் துருவ் ஷோரேவை போல்ட் […]
டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக் தொடரில் 225 ரன்களை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ், 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியிடம் போராடி தோற்றது. இந்தப் போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் […]
உலக அளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அவர் ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 1770 கோடி சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. ரொனால்டோ புதிய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை அல் நஸர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது […]
முன்னாள் WWE மற்றும் AEW மல்யுத்த வீரர் ஜெய்சின் ஸ்டிரைஃப் நீண்ட உடல்நலப் போருக்குப் பிறகு 37 வயதில் காலமானார். நேதன் பிளாட்ஜெட் என்ற இயற்பெயரை மாற்றி ஜெய்சின் ஸ்டிரைஃப் என்று மல்யுத்த களத்தில் பங்குபெற்றார்.WWE மற்றும் ஆல் எலைட் மல்யுத்தம் போன்ற பல மல்யுத்த நிறுவனங்களுக்காக ஸ்டிரைஃப் விளையாடினார். ஜெய்சின் ஸ்டிரைஃப் 2004 இல் அறிமுகமானார் மற்றும் மேக்னம் ப்ரோ மல்யுத்தத்தை 2010 இல் தொடங்கினார், அங்கு அவர் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் , டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானதில், கார் தீப்பிடித்து. காரில் இருந்து ரிஷப் பந்த் உடனே வெளியேறியதால் காயத்துடன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தடுப்பு […]
பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார். கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார். சமீபத்தில், அவரது புற்றுநோய்க்கான மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக மருத்துவமனையில் […]
லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் மகேந்திர சிங் தோனி. இருவருமே தங்கள் நாட்டை சர்வதேச அரங்கில் முன்னிலை பெறச் செய்து பல்வேறு சாதனைகளை படைக்க உறுதுணையாக இருந்துள்ளனர். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி […]