மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை https://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், ‘வராண்டா ரேஸ்’ என்ற தனியாா் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவமாக வழங்குகிறது. 18 […]

அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரியான விவரங்களை கொண்டிருக்கும் வகையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும் புதிய சேவையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆவணங்களிலும் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் ஒரு பிழை போன்ற மாற்றங்கள் இருக்கும். இந்த விவரங்களை திருத்துவது கடினம் என்பதால், விவரங்களை மாற்ற ஒவ்வொரு ஆவணத்திற்கும் வெவ்வேறு […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலிகளிடம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனிதர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயலாஜி என்ற அறிவியல் அமைப்பு நுண்ணுயிர் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்த அறிவியல் அமைப்பு கோவிட்-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்கிரான் வகைகள் எலிகளிடம் […]

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும் விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். சுமார் 450 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அருள்மிகு மாரியம்மன் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இத்திருக்கோயிலிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. […]

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால், நீரிழப்பு, வயிற்று பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. கோடைக்காலங்களில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் அதேவேளையில் ஆரோக்கியமாக இருக்கவும் பல்வேறு பானங்கள் மற்றும் பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துவருகின்றனர். அந்தவகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க மக்களுக்காக ஆங்காங்கே சாலையோரங்களில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காயை மக்களும் அதிகளவில் […]

TN DET தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Tamilnadu Directorate of Employment and Training எனப்படும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Full Stack Developer மற்றும் Junior Developer ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி […]

பொதுத்தேர்வில் எழுதும் மாணவர்கள் தேர்வுகளை நினைத்து அவ்வபோது மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வுகள் கூறியுள்ள நிலையில், அதனை போக்கு சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம். மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது ஆண்டு இறுதி தேர்வுகளை எதிர்நோக்கி உள்ளனர். இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பது, சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளால் உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். அதே நேரத்தில் சில மாணவர்கள் தேர்வுகளை […]

மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள ஹைட்ரஜனை கொண்டு மின்சாரத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிசய நிகழ்வு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் மண்ணில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர், இது காற்றை ஆற்றலாக மாற்றுகிறது, இது ஒரு புதிய சுத்தமான சக்திக்கான வழியைத் திறக்கிறது. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்பு, இந்த பாக்டீரியா வளிமண்டலத்தில் குறைந்த அளவு ஹைட்ரஜனைப் பயன்படுத்தி மின்னோட்டத்தை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. […]

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூ.5,000 கிடைக்கும். மேலும், உங்களின் மகளுக்கு 18 வயதாகும் போது, ​​அரசானது ரூ.75,000 வரை தருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மகள்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அம்மாநில அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தில் மகளுக்கு ரூ.75,000 […]

கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். ஆனால், செல்லப்பிராணிகள் அதுவும் குறிப்பாக நாய்கள் கோடையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. அதனால் கோடையில் நாய்களுக்கு விதைகள் நீக்கிய தர்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகள், செலரி ஆகியவற்றை உண்ணத் தரலாம். அதேபோல் நாய்கள் மொட்டை வெயிலில் விடாமல் வெப்பம் தாக்கம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு மாற்றலாம். கோடையில் நாய்களை […]