fbpx

உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வரையில் 3 கட்டங்களாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் பனாமா ஹோட்டலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் ஹோட்டலின் ஜன்னல் …

Mosquitoes: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு கிராமத்தில் கொசுக்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.

உலக முழுவதுமே கொசுவால் ஏற்படும் நோய்களும் அதிகம். இவை சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்புகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. …

அமெரிக்காவின் அரிசோனா விமான நிலையத்தில் நேற்று இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு மரானா பிராந்திய விமான நிலையத்தில் லங்காயர் 360 MK II விமானமும், செஸ்னா 172S விமானமும் மோதிக்கொண்டதாக மத்திய விமான நிர்வாகம் …

போப் பிரான்சிஸ் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், வத்திக்கானில் அவரது இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக இருந்து வருபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு வயது 88. இந்நிலையில், இவரின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இத்தாலியின் …

ஜெர்மனியின் முனிச்சில் உள்ள கல்லறைகள் மற்றும் மர சிலுவைகளில் சுமார் 1,000 ஸ்டிக்கர்கள் மர்மமான முறையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் எங்கிருந்து வந்தன, ஏன் வந்தன என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 5×3.5-சென்டிமீட்டர் ஸ்டிக்கர்களில் QR குறியீடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஸ்கேன் செய்தவுடன், கல்லறையில் புதைக்கப்பட்ட நபரின் பெயரும் கல்லறையில் அதன் இருப்பிடமும் …

2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

2032ஆம் ஆண்டில் 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியது என்று …

போப் பிரான்சிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆய்வகப் பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே மற்றும் போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த மருத்துவ நிலையின் அடிப்படையில், அவரது நுரையீரல்கள் இரண்டிலும் …

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதிலிருந்து டிரம்ப்பின் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பல விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. டிரம்பின் சமீபத்திய முடிவால், அமெரிக்க வங்கிகள் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியில் இருந்து டன் கணக்கில் தங்கத்தை நியூயார்க்கிற்கு நகர்த்தி வருகின்றன. இதற்கான காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

டிரம்பின் …

Reciprocal tariffs: டிரம்பின் வரி விதிப்பு முடிவால், இந்தியாவின் ரசாயனங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் நகைத் துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, ஆட்டோமொபைல், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் துறைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவின் கவலைகளை அதிகரித்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் …

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முறிந்த உறவுகளை மீட்டெடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக செவ்வாயன்று சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதர்கள் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் …