பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் நாசாவில் பணிபுரியும் 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் […]

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். தெற்கு ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணம் மர்ஜா மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்ட அந்த நபருக்கு சிறுமியை பெற்றோரே விற்ற நிலையில், இந்த திருமணம் நடந்துள்ளது.. இந்த நிலையில் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படலாம் என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரானின் உச்ச தலைவரின் உயர் ஆலோசகரான ஜவாத் லாரிஜானி, ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் “ அமெரிக்க அதிபர் புளோரிடாவின் மார்-எ-லாகோ எஸ்டேட்டில் சூரிய குளியல் செய்யும் போது அவர் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும். ஈ “மார்-எ-லாகோவில் இனி சூரிய குளியல் எடுக்க முடியாதபடி […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும்போது டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது போர் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி அளித்த […]

ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். […]

உக்ரைன் முழுவதிலும் 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொடுவர தீவிர முயற்சிகள் நடந்து வந்தாலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், நேற்று உக்ரைன் மீது […]

மத நம்பிக்கைகளை உறுதியாக பின்பற்றுவதால், முஸ்லீம் ஆண்களிடம் பெண்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதாகவும், இது பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் உறுதியை கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்றில், ஆண்-பெண் உறவுகள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது, இது உலகளவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள், முஸ்லிம் ஆண்கள் மீது ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பை உணர்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. ஆராய்ச்சி படி, முஸ்லிம் ஆண்களின் மத ஒழுக்கம், உறுதியான […]

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. பூமியின் விட்டம் 12,742 […]