ப்ரீகாபலின் மாத்திரை (Pregabalin Tablet) வலிப்பு நோய், நரம்பு வலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. ஆனால், இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் பல நாடுகளில், ப்ரீகாபலின் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதை உட்கொள்பவர்கள் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவாக எடுத்துக் கொண்டால் […]

வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், சுவையூட்டப்பட்ட லாலிபாப்களை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இப்போது வரை, வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் ஓரளவு வேதனையாக இருந்தன. அதற்கு நிறைய திறமை தேவைப்பட்டது. ஆனால், இப்போது விஞ்ஞானிகள் இந்த லாலிபாப்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு விரைவான நோயறிதலாக மட்டுமின்றி, மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும் என கூறுகின்றனர். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த லாலிபாப்கள் ஸ்மார்ட் ஹைட்ரோஜெலால் (smart […]

Israel: காஸாவில் ஹமாஸ் பிடியில் உள்ள 40 பணயக்கைதிகளுக்காக சுமார் 800 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயார் என்று கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன நாட்டின் காஸாவில் உள்ள ஹமாஸ் படைகள் தொடங்கி வைத்த போர், அவர்களுக்கே வினையாகி விட்டது. இஸ்ரேல் படைகள் மிக உக்கிரமாக தாக்கி வருகிறது. இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துள்ளனர். […]

Pandemic: உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் மற்றொரு தொற்றுநோய் தாக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) மார்ச் 11, 2020 அன்று கொரோனா வைரஸ் என்றும் அழைக்கப்படும் கோவிட்-19 ஐ உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வைரஸ் பரவி உலகளவில் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. கோடிக்கணக்கான […]

Ozempic: எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Ozempic மருந்து பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளின் செயல்திறனைக் குறைத்து பெண்கள் கர்ப்பமடைவதை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Ozempic மற்றும் Wegovy போன்ற மருந்துகள் எடை இழப்புக்கு பிரபலமடைந்தது. இந்தநிலையில், இந்த Ozempic மருந்து எடுத்தக்கொண்ட பெண்களில் பலர் கர்ப்பமடைந்துள்ளனர். அந்தவகையில், TikTok பயனர் @dkaslolive கடந்த மாதம் சமூக ஊடக தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “எனது கடைசி கர்ப்பத்திற்கு ஒரு நீண்ட இடைவெளி […]

Ice Water: ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் […]

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் முகேஷ் அம்பானி, ஆகியோரை விட அதிக பணக்காரர் என்று கூறப்படும் உலகின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதி யார் என்று உங்களுக்கு தெரியுமா? உலகப் பணக்காரர்கள் என்றாலே எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற கோடீஸ்வரர்களின் பெயர்கள் நம் நினைவுக்கு வரும்.. இந்தியாவை பொறுத்தவரை, முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார் உள்ளிட்டோர் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆனால், […]

Earthquake: இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியாவில் அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. அதாவது அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் 32 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். […]

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் அரங்கத்திற்குள், திடீரென நுழைந்த ராணுவ உடை அணிந்திருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் […]

Cancer: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத்மிட்டில்டன் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்மிட்டில்டன். இவருக்கு வயது 42. கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ […]