50 பயணிகளுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் சீன எல்லைக்கு அருகில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் ஒரு பயணிகள் விமானம் காணாமல் போனது. காணாமல் போன விமானம் An-24 பயணிகள் விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.. அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், சீனாவின் எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகரத்தை […]

இத்தாலியின் பிரெசியா பகுதியில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்த பயங்கர விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியின் பிரெசியா அருகே உள்ள A21 கோர்டமோல்-ஆஸ்பிடேல் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் இரு பயணிகளும் உயிரிழந்தனர் மற்றும் சாலையில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர். ரிபப்ளிக் வேர்ல்டின் கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட […]

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல ஆண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. ஆனால் தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, YCT-529 அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. YCT-529 என்றால் என்ன, அது ஆண் உடலில் எவ்வாறு செயல்படுகிறது? எந்த ஹார்மோன்களும் இல்லாத கருத்தடை மாத்திரையான YCT-529, ஏற்கனவே விலங்கு பரிசோதனையில் நேர்மறையான […]

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]

26/11 தாக்குதலின் முக்கிய குற்றவாளியும், நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான லஷ்கர் பயங்கரவாதி அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதி அப்துல் அஜீஸ், பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார். மே 6 அன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது அவர் காயமடைந்ததாக தகவல்கள் […]

அமெரிக்காவில் தாக்குதல், வீட்டு வன்முறை அல்லது பிற கடுமையான குற்றங்களைச் செய்வதற்கு எதிராக வெளிநாட்டினருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்கள் உடனடியாக விசா ரத்து செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தகுதியை பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்க விசா என்பது “ஒரு சலுகை, ஒரு உரிமை அல்ல” என்றும் மேலும் குற்றச் செயல்கள் […]