ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் படுகொலைக்குப் பிறகு இந்த மோதல் முடிவுக்கு வரும் என்று நெதன்யாகு கூறியுள்ளார். ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்களன்று ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி […]

ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஈரான் அரசாங்கம் திங்களன்று ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் பெரும்பாலோர் மருத்துவம் மற்றும் மதத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆகும். தற்போதைய மோதலால் ஈரானிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நில எல்லைகள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக பயன்படுத்த முடியும் என […]

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹாங்காங்கில் அவசரமாக தரைறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கே சென்றது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தால் இயக்கப்படும் AI315 விமானம், திட்டமிட்டபடி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது, ஆனால் விமானி ஒரு கணினி செயலிழப்பைக் கண்டறிந்ததால் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது […]

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு தடையாக கருதி, ஈரான் அவரைக் கொல்ல இரண்டு முறை முயற்சி செய்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் , ஈரானில் உள்ள இந்திய தூதரகம் பல உதவி எண்களை வெளியிட்டுள்ளது மற்றும் தற்போது ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ஒரு டெலிகிராம் இணைப்பையும் உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் […]

லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக […]

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் […]