எதிரிகளின் ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது, இது நவீன போரில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. காசாவில் நடந்து வரும் போரின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலிய விமானப்படையின் வான்வழி பாதுகாப்பு அணி நேரடி போர்க்கள நிலைமைகளில் ஒரு முன்மாதிரி லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது. இஸ்ரேலை தளமாகக் கொண்ட ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் […]

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வரவில்லை. இப்போது உக்ரைன் ரஷ்ய இராணுவ தளங்களை குறிவைத்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டு உக்ரைன் இராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் இந்தத் தாக்குதலை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கியதாக ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் விமானப்படை தளத்தை உக்ரைன் தாக்கியது. […]

ரஷ்யாவின் சைபீரியாவில் ஆபரேஷன் ஸ்பைடர்வெப் திட்டத்தின் கீழ் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தின் மீது உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியது, 40க்கும் மேற்பட்ட ரஷ்ய […]

காதலனின் 30 கோடி லாட்டரி தொகையை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆன காதலி மீது இளைஞன் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர், தனது முன்னாள் காதலியான கிரிஸ்டல் மெக்கே மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 2024-ல் வெற்றி பெற்ற ரூ.30 கோடி லாட்டரி டிக்கெட் தன்னுடையது என்றும், அந்த பணம் இப்போது தனது முன்னாள் காதலியான மெக்கேவிடம் […]

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் காலரா தொற்றும் வேகமெடுத்துள்ள நிலையில், பரவி வரும் புதிய காலரா வைரஸ் 10 லட்சம் குழந்தைகளை பாதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் […]

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகோனிச்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் கிளிமோவோவிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் எஞ்சின் உட்பட பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் […]

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் நமது நெருங்கிய நட்பு நாடுகள் கூட நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட நமது நாட்டிற்கு நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக ஒப்புக்கொண்டார். “சீனா பாகிஸ்தானின் பழமையான நண்பர். சவுதி அரேபியா, […]

மிஸ் உலகம் 2025 பட்டத்தை தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றுள்ளார். இதன் மூலம் மிஸ் உலக கிரீடம் ஆசிய கண்டத்திற்கு வந்துள்ளது. இறுதிச் சுற்றில் மார்ட்டினிக் (அரெல்லி ஜாவோச்சிம்), எத்தியோப்பியா (ஹசெட் டிரெஜ் அட்மாசு), போலந்து (மஜா லாட்ஜா), தாய்லாந்து (ஓபல் சுசாதா சௌங்ஸ்ரி) ஆகியோர் இடம்பிடித்தனர். இவர்களில் இறுதி வெற்றியாளராக மிஸ் தாய்லாந்து ஓபல் சுசாதா அறிவிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி […]

உலகம் முழுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவது பற்றி பேசப்பட்டாலும், சில இடங்களில் பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காகப் போராடி வருகின்றனர். ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்கள் வெளியே சென்று சுதந்திரமாக தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள், இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வேறு சில நாடுகளிலும் இதுதான் நிலைமை. உலகில் பெண்கள் மட்டுமே ஆட்சி செய்யும் ஒரு இடத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இங்கு ஆண்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் […]

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]